உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 6 பேர் மீது போலீஸ் வழக்கு

நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 6 பேர் மீது போலீஸ் வழக்கு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வனச்சரகம், ஏத்தக்கோயில் பகுதியில் கடந்த வாரம் நாட்டு வெடி வைத்து காட்டு பன்றியை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிட்டதாக பாலக்கோம்பையை சேர்ந்த குமரவேல் 50, ராமர் 24, ஏத்தக்கோயிலை சேர்ந்த ராமர் 50, முனியப்பன் 35, அழகுநாதன் 19, அழகர் 26 ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.விசாரணையில் முனியப்பன் என்பவரிடம் நாட்டு வெடிகுண்டுகளை குமரவேல், ராமர் ஆகியோர் வாங்கியது தெரிந்தது. ஆறு பேரையும் கைது செய்த வனத்துறையினர் 8 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளால் மனித உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார், 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆண்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த 6 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை