| ADDED : ஜூலை 04, 2024 02:10 AM
பெண் தற்கொலைதேனி: பழனிசெட்டிபட்டி சிவசக்தி நகர் முருகேசன் 56. பேக்கரி கடை உரிமையாளர். இவரது மனைவி சித்ரா 52. இத்தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், செயற்கை கருத்தரித்தல் மூலம் மகன் முகேஸ்ராகுல் 15, பிறந்தான். செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு பின் மனைவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சிகிச்சை எடுத்த நிலையில், ஜூலை 2ல் மனைவி வயிற்று வலி இருப்பதாக தெரிவித்தார். டாக்டரின் அப்பாயின்மென்ட் பெற்று மாலையில் சிகிச்சைக்கு செல்லலாம் என மனைவியிடம் கூறிவிட்டு கடைக்குச் சென்றார். மதியம் வீட்டிற்கு வந்த கணவர், கதவு பூட்டியிருந்தது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மனைவி துாக்கிட்டு இறந்தது தெரிந்தது. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டுதேனி: பங்கஜம் ஹவுஸ் தெரு சுப்புராம் 61. இவர் தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கடையில் சர்வீஸ் பிரிவில் பணிபுரிந்தார். கடந்த மே 30ல் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை கடையில் தெற்குப்பகுதியில் நிறுத்தினார். அன்று இரவு 9:00 மணிக்கு வீட்டிற்கு செல்ல டூவீலர் நிறுத்திய இடத்திற்கு சென்ற போது, டூவீலர் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. புகாரில், தேனி போலீசார் டூவீலரை தேடி வருகின்றனர்.முன் பகையால் தகராறு: 2 பேர் மீது வழக்குஆண்டிபட்டி: ராஜதானியைச்சேர்ந்தவர் செல்வம் 41, இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த முத்து 39, என்பவருக்கும் முன் பகை இருந்துள்ளது. நேற்று முன்தினம் செல்வம் ராஜதானி அரசு கள்ளர் மாணவர் விடுதி அருகே இருந்த போது, முத்து அவரது அண்ணன் பாலன் ஆகியோர் செல்வத்தை மண்வெட்டி கம்பால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். இதனை தடுக்க வந்த செல்வத்தின் மகன் சஞ்சய்குமாருக்கும் காயம் ஏற்பட்டது. செல்வம் புகாரில் ராஜதானி போலீசார் முத்து, பாலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்