உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குடும்ப பிரச்னையில் போலீஸ்காரர் தற்கொலை

குடும்ப பிரச்னையில் போலீஸ்காரர் தற்கொலை

கடமலைக்குண்டு,:தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே குடும்பபிரச்னை, உடல்நிலை பாதிப்பால் போலீஸ்காரர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு அருகே பொன்னம்படுகையை சேர்ந்தவர் பாபு 39. சென்னை கொருக்குப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீஸ்காரராக பணிபுரிந்தார். இவருக்கு மனைவி ஜெயபாரதி, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாபு பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சித்த மருத்துவத்தில் சிகிச்சை பெற்றார். விடுமுறையில் இருந்த பாபு, அவரது மனைவிக்கும் இடையே சில மாதங்களாக குடும்ப பிரச்னை இருந்துள்ளது. இதனால் ஜெயபாரதி கடமலைக்குண்டு அருகே குமணன்தொழுவில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். பாபு பலமுறை அழைத்தும் ஜெயபாரதி அவருடன் செல்ல மறுத்துவிட்டார். மஞ்சள் காமாலை நோய் தாக்கம் அதிகரித்தது. மனைவியும் பிரிந்து சென்ற சோகத்தால் மனம் வெறுத்த நிலையில் இருந்தார். நேற்றுமுன்தினம் பொன்னம்படுகையில் உள்ள அவரது வீட்டில் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மயிலாடும்பாறை போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை