உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு

பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கண்டமனூர் வனச்சரகம் சார்பில் அய்யனார்புரத்தில் பாலித்தீன் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.கண்டமனூர் வனச்சரகர் திருமுருகன் தலைமை வகித்தார். துரைச்சாமிபுரம் ஊராட்சி தலைவர் மாயகிருஷ்ணன், துணைத் தலைவர் கணேசன், முன்னாள் துணைத் தலைவர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேந்திராநகர் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முகாமில் பங்கேற்றனர். பாலித்தீன் கழிவுகளால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.அய்யனார் கோயில் மலை அடிவாரத்தில் இருந்த பாலித்தீன் குப்பைகளை உரிய பாதுகாப்புடன் மாணவர்கள் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ