| ADDED : ஜூலை 31, 2024 05:15 AM
தேனி : கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய 1500 ஆசிரியர்களை கைது செய்ததற்குஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தேனி மாவட்ட தலைவர் செல்லத்துரை கண்டனம் தெரிவித்தார்.தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான 'டிட்டோ ஜாக்' சார்பில் மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பிடிக்கப்பட்ட ஒப்படைப்பு ஊதியம் வழங்க வேண்டும். பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இவர்கள் 1500 பேரை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.ஆசிரியர்கள் கைது பற்றி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி தேனி மாவட்ட தலைவர் செல்லத்துரை கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தது கண்டிக்கதக்கது. தி.மு.க., அரசு தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்ற வில்லை. கடந்த அக்டோபரில் போராட்டம் அறிவித்த போது அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. எங்கள் கோரிக்கைகளில் 12 கோரிக்கையை ஏற்று கொள்வதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெற்றோம். ஆறு மாதங்களுக்கு பின் கூட ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடப்பட வில்லை. தற்போது அரசாணை 243 ஆல் ஒன்றிய அளவில் இருந்த பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலை மாற்றி, மாநில அளவில் கொண்டு சென்றது. ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையால் பல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்றார்.