உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காததால் சிரமம்; புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை

பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காததால் சிரமம்; புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை

தேனி: கோவிந்தநகரத்தில் பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காததால், பொதுமக்கள் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.தேனி ஒன்றியம் கோவிந்தநகரத்தில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி டவர் உள்ளது. இந்த டவர் மூலம் அம்பாசமுத்திரம், சோலைத்தேவன்பட்டி, ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பி.எஸ்.என்.எல்., சிம் கார்டில் அலைபேசி பயன்படுத்துகின்றனர். இப்பகுதியினர் பலர் வெளிநாடுகளிலும் வசிப்பதால் பி.எஸ்.என்.எல்., அலைபேசி தொடர்பு பயனாக இருந்தது. பி.எஸ்.என்.எல்., அலைபேசி ரீசார்ஜ் கட்டணம் 30 நாட்களுக்கு ரூ.110ஆகும். இதே தனியாரிடம் 28 நாட்களுக்கு ரூ. 180-200 வரை செலவிட வேண்டும். இந் நிலையில் கோவிந்தநகரம் பகுதியில்பி.எஸ்.என்.எல்., சிக்னல் ஒரு வாரத்திற்கு மேல் கிடைக்கவில்லை. இதனால் இப்பகுதியினர் வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் நிலவுகிறது. இது தொடர்பாக தொலை தொடர்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என புலம்புகின்றனர். இப்பகுதியில் அலைபேசி சிக்னல் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை