| ADDED : மே 06, 2024 12:44 AM
பெரியகுளம் : 'கொலை, திருட்டு, மது, கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கும் வடுகபட்டியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை சீராக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் வெள்ளைப் பூண்டு வர்த்தகத்திலும், வெற்றிலை கொடிக்கால் விவசாயத்திற்கும் வடுகபட்டி முன்னிலையில் உள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். 24 மணி நேரமும் டாஸ்மாக் சில்லரை விற்பனையாக நடக்கிறது.கஞ்சா விற்பனையும் அதிகளவில் உள்ளது. வெள்ளைப் பூண்டு, வெற்றிலை தொழிலாளர்களை குறி வைத்து கந்து வட்டி, ஆன்லைன் லாட்டரி விற்பனை சில போலீசாரின் உதவியுடன் நடக்கிறது.ஒரு மாதத்தில் 5 டூவீலர்கள் திருடு போயுள்ளன. ஒன்று கூட கண்டுபிடிக்கவில்லை. சில தினங்களுக்கு முன் டாஸ்மாக் பார் நடத்திய முருகனை, மற்றொரு டாஸ்மாக் பார் நடத்திய பிரபு தொழில் போட்டியால் கொலை செய்து கைதானார்.வடுகபட்டியிலிருந்து பெரியகுளம் போலீஸ் ஸ்டேஷன் 5 கி.மீ., உள்ளது. இரவு நேரங்களில் போலீஸ் ரவுண்ட் வந்து பல மாதங்கள் ஆகி விட்டன. இங்குள்ள அனைத்து சமூக அமைப்பினர், வடுகபட்டி அருகே உள்ள மேல்மங்கலம், காமாக்காபட்டியை மையப்படுத்தி வடுகபட்டிக்கு தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். இதற்கு முன்பாக அவுட் போலீஸ் ஸ்டேஷன் ஆரம்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.