உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழைக்கு கம்பு, மக்காச்சோளம் உட்பட 28.35  எக்டேர் பாதிப்பு

மழைக்கு கம்பு, மக்காச்சோளம் உட்பட 28.35  எக்டேர் பாதிப்பு

தேனி : மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கோடை மழையில் முருங்கை, வாழை, கம்பு, மக்காச்சோளம் உட்பட 28.35 எக்டேரில் சாகுபடி செய்த பயிர்கள் சேதமடைந்தன.மாவட்டத்தில் மே 8 முதல் ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மழையினால் சில இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன. ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் குன்னுார், மரிக்குண்டு, தேக்கம்பட்டி, திம்மரசநாயக்கனுார், கம்பம் வட்டாரம் கீழ்கூடலுார், கம்பம், பெரியகுளம் வட்டாரத்தில் ஜெயமங்கலம், குள்ளபுரம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அதிகபட்சமாக வாழை 15.35 எக்டேர், முருங்கை 6.91 எக்டேர், மக்காச்சோளம் 4.71 எக்டேர், கம்பு 0.40 எக்டேர் என 28.35 எக்டேர் பயிர் சாகுபடி பாதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை