உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கம்பம் மெயின் ரோட்டில் ஜூலை 2ல் ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பம் மெயின் ரோட்டில் ஜூலை 2ல் ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பம் : கம்பம் மெயின்ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் ஜூலை 2 ல் மேற்கொள்ள இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றிட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நகரங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயளவிற்கு ஆக்கிரமிப்பு அகற்றுவதும், மறுநாளே கடைக்காரர்கள் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வது வழக்கமாக நடந்து வருகிறது.வரும் ஜூலை 2 ல் கம்பம் மெயின்ரோட்டில் காமயகவுண்டன்பட்டி ரோடு பிரிவில் இருந்து அரசு மருத்துவமனை வரை ரோட்டின் இரண்டு பக்கமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக கடைக்காரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை