உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நிழற்குடையை ஆக்கிரமித்து அமைத்த ஷெட் அகற்றம்: இருபதுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு இருபதுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

நிழற்குடையை ஆக்கிரமித்து அமைத்த ஷெட் அகற்றம்: இருபதுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு இருபதுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு

மூணாறு : மூணாறில் ஊராட்சி சார்பிலான நிழற்குடையை ஆக்கிரமித்து அமைத்த ஷெட்டை நேற்று ஊராட்சியினர் அகற்றினர்.மூணாறில் இரவு சுற்றுலா வழி காட்டி எனும் அமைப்பு செயல்படுகிறது.இந்த அமைப்பு சார்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டது. அதற்கு அலுவலகம் மற்றும் குளிர் சாதன பெட்டி வைப்பதற்கு என நகரில் தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலகம் எதிரில் ஊராட்சி சார்பிலான நிழற்குடையை ஆக்கிரமித்து ஷெட் அமைத்தனர்.முறையாக அனுமதி பெறாமல் நிழற்குடையை ஆக்கிரமித்து ஷெட் அமைத்ததாக கூறி அதனை இரண்டு நாட்களில் அகற்றுமாறு சுற்றுலா வழிகாட்டி அமைப்பினருக்கு ஜூலை 15 ல் ஊராட்சி நிர்வாகத்தினர் நோட்டீஸ் வழங்கினர்.அந்த அமைப்பினர் ஷெட்டை அகற்றாததால் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி ஊழியர்கள் அகற்றினர்.வழக்கு பதிவு: அச்சம்பவம் தொடர்பாக இரவு சுற்றுலா வழிகாட்டிகள் அமைப்பைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்டோர் மீது பொது சொத்தை ஆக்கிரமித்தல், சேதப்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை