உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பளியன்குடிக்கு ரோடு வசதி; நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு

பளியன்குடிக்கு ரோடு வசதி; நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு

கூடலுார் : லோயர்கேம்ப் பளியன்குடியில் நீண்ட நாள் பிரச்னையாக இருந்து வந்த ரோடு அமைக்கும் பணி வனத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.லோயர்கேம்ப் அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பளியன்குடி. 53 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளதால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் சுருளியாறு மின்நிலைய ரோடு விலக்கிலிருந்து பளியன்குடிக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. இதனை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில் 500 மீட்டர் தூரத்திற்கு வனத்துறையினர் ரோடு அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர். இது தவிர காட்டு யானைகள் தொந்தரவு அதிகம் இருந்ததால் வனப்பகுதியை ஒட்டி அகழி சீரமைத்து சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி