உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ்காரர் மருத்துவ செலவிற்கு ஆர்.டி.ஓ., ரூ.3 லட்சம் நிதியுதவி

போலீஸ்காரர் மருத்துவ செலவிற்கு ஆர்.டி.ஓ., ரூ.3 லட்சம் நிதியுதவி

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பணியின் போது பாத்ரூமில் மயங்கி விழுந்து தலையில் பலத்த காயமுற்ற போலீஸ்காரர் பாலமுருகன் 35, சிகிச்சை செலவிற்கு ஆர்.டி.ஓ., முத்துமாதவன் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் தென்கரை ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். ஜூன் 4ல் டூவீலரில் ரோந்து பணியின் போது பெரியகுளம் போலீஸ் குடியிருப்பில் உள்ள பாத்ரூமிற்கு சென்றார். அவருக்கு உயர்ரத்த அழுத்தம் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது குடும்பத்தினர், போலீஸ் நண்பர்கள் உதவியுடன் இதுவரை ரூ.21 லட்சம் சிகிச்சைக்கு செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் சொந்த பணம் ரூ.3 லட்சத்தை பாலமுருகன் சிகிச்சைக்காக குடும்பத்தினரிடம் வழங்கினார். தற்போது பாலமுருகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.இதனையறிந்த 2010 பேட்ஜ் போலீசார் விருமாண்டி, லட்சுமணன், ஆகாசகாளை, விஜயலட்சுமி, பாரதி ஆகியோர் ஆர்.டி.ஓ., முத்துமாதவனுக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை