உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஆண்டிபட்டி, : சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா 4 நாட்கள் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் பொங்கல் விழா ஏப்.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் செவ்வாய் கிழமை அம்மன் சிம்ம வாகனத்திலும், புதன்கிழமை அன்னப் பறவை வாகனத்திலும், வியாழக்கிழமை முத்துப் பல்லக்கிலும், வெள்ளிக்கிழமை வான வேடிக்கைகளுடன் பூ பல்லக்கிலும் சக்கம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடந்தது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் மொட்டையிட்டு, பொங்கலிட்டு, முளைப்பாரி, தீச்சட்டி, பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி, பூக்குழி இறங்கினர். பாதுகாப்பு பணியை போலீசார், தீயணைப்பு துறையினர் மேற்கொண்டனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஹரிஷ் குமார் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை