உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தேவதானப்பட்டி, : தேவதானப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் நிபந்தன் மீது வழக்கு போடப்பட்டதை கண்டித்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் முருகன் என்பவரது தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி துணைத்தலைவர் நிபந்தன் யாரையும் தரக்குறைவாக பேசவில்லை என்றும் அவர் மீது பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்.பொய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.ஐ., மணிகண்டன் கூறியதால் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை