உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.50 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 17.50 லட்சம் மோசடி

ரூ.50 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ. 17.50 லட்சம் மோசடி

தேனி, : தேனி பழனி செட்டிபட்டி கூரியர் நிறுவன ஊழியர் மாரியம்மாளிடம் ரூ.50 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த முத்துதிவ்யா 35, கணேசன் 45 ஆகியோரை தேனி போலீசார் கைது செய்தனர்.பழனிசெட்டிபட்டி மாரியம்மாள் 50. தேனியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரு ஆண்டிற்கு முன் அல்லிநகரம் அக்ரஹாரத்தெரு கணேசன் மூலம் சமதர்மபுரம் முத்துதிவ்யா அறிமுகமானார். மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வட்டியில்லா கடனாக ரூ.50 லட்சம் பெற்று தருவதாக இருவரும் மாரியம்மாளிடம் ஆசை வார்த்தை கூறினர். மேலும் கடன் பெற ரூ. 20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் எனக் கூறினர். இதனை நம்பிய மாரியம்மாள், முத்துதிவ்யாவின் வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.17.50 லட்சத்தை செலுத்தினார். பின் கடன் வாங்கி தராமல் ஏமாற்றி வந்தனர். பணத்தை திருப்பி கேட்ட போது இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர். மாரியம்மாள் தேனி போலீசில் புகார் அளித்தார். முத்துதிவ்யா, கணேசன் இருவரையும் இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., ஜீவானந்தம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை