உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மண் ஏற்றி சென்ற டிராக்டர்கள் பறிமுதல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் அனுமதியின்றி செங்கல் காளவாசலுக்கு மண் ஏற்றிச் சென்ற இரு டிராக்டர்களை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன், வருவாய் ஆய்வாளர் முத்தமிழ் ஆகியோர் பாலக்கோம்பை ஈஸ்வரன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு டிராக்டர்களில் காளவாசல் மண் கொண்டு சென்றனர். அவர்களை விசாரித்ததில் டிராக்டர்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள் ஓடி விட்டனர்.டிராக்டர்கள் ராஜதானி போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் ராயவேலூரைச் சேர்ந்த கரையாண்டி 50, கென்னடி நகரைச் சேர்ந்த சுந்தரமகாலிங்கம் ஆகியோர் மீது ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ