மேலும் செய்திகள்
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் வளாகத்தில் சுகாதார பாதிப்பு
18 minutes ago
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ஸ்பார்தோடியா மரப்பூக்கள்
23 minutes ago
முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய 3957 பேர்
42 minutes ago
தேனி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தேனியில் சிவசேனா கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.இச்சம்பத்தை முன்கூட்டியே தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து சிவசேனா கட்சி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் கட்சியினர் முதல்வர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தினர். அல்லிநகரம் நேருஜி ரோட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு உருவ பொம்மையை கொண்டு வந்தனர்.டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். சிவசேனா கட்சியினரிடமிருந்து உருவபொம்மையை கைப்பற்றி போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். உருவ பொம்மைய கொண்டு வந்த 17பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
18 minutes ago
23 minutes ago
42 minutes ago