உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிலம்ப பயிற்சியாளர் வீடியோ பதிவிட்டு தற்கொலை

சிலம்ப பயிற்சியாளர் வீடியோ பதிவிட்டு தற்கொலை

தேனி : தேனி அரண்மனைப்புதுார் முல்லை நகர் காலனி ஈஸ்வரன் 29. இவர் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை என்ற பெயரில் இளைஞர்கள், பள்ளிக் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி அளித்தார்.திண்டுக்கல்லை சேர்ந்த மோனிகாவை திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களாக பிரிந்து வாழ்ந்தனர்.ஜூன் 4 மாலை அலைபேசி வீடியோவில், வாழ்க்கையில் நான் கஷ்டப்பட்டு இருந்தேன்.அதனால் என்னை மன்னித்து விடுங்கள்' என பதிவு செய்து துாக்குக்கயிறை கைகளில் வைத்திருப்பது போன்ற வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.தாயார் ஈஸ்வரி, மகனின் இறப்பு குறித்து விசாரித்து பழனிசெட்டிபட்டியில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை