உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ் டிரைவர் வீட்டில் 16 பவுன் நகை, பணம் கொள்ளை வாலிபர் கைது

அரசு பஸ் டிரைவர் வீட்டில் 16 பவுன் நகை, பணம் கொள்ளை வாலிபர் கைது

தேனி, : பெரியகுளத்தில் அரசு பஸ் டிரைவர் செல்லமுத்து 50, வீட்டில் ஆறே முக்கால் பவுன் நகை, பணம் ரூ. 1.70 லட்சம் நேற்று முன்தினம் திருடு போனது. இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கம்பம் சுருளிபட்டி நடுத்தெரு ராமசந்திரன் மகன் ஆகாஷை 18, போலீசார் கைது செய்தனர்.வடுகபட்டி சேடபட்டி மறவர் தெரு செல்லமுத்து 50. அரசு பஸ் டிரைவர். மனைவி சுந்தரம்மாள், மகன் நிரஞ்சன், மகள் பெருந்தேவி உள்ளனர். பெருந்தேவி திருமணமாகி தனியே வசிக்கிறார். இந்நிலையில் ஜூலை 13 காலை செல்லமுத்து வீட்டினை பூட்டி விட்டு அருகில் இருந்த ஜன்னலில் சாவியை வைத்து விட்டு, வடுகபட்டி பஸ் ஸ்டாண்ட் சென்றார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டின் உள்பகுதியில் பீரோ கதவு உடைக்கப்பட்டு, நகைபெட்டி கீழே கிடந்தது. பீரோவில் இருந்து தங்க தோடுகள், மோதிரம், வளையல்கள் செயின் உட்பட ரூ. 5 லட்சம் மதிப்பிலான ஆறே முக்கால் பவுன் நகை, பணம் ரூ. 1.70 லட்சம் திருடு போனது. தென்கரை போலீசில் செல்லமுத்து புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்.ஐ., கர்ணன் தலைமையில் குழு அமைத்து விசாரித்தனர். அதே பகுதியில் சுற்றி திரிந்த கம்பம் சுருளிபட்டி ஆகாஷை விசாரித்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து செல்லமுத்து வீட்டில் திருடிய நகைகள், பணத்தை மீட்டனர்.போலீசார் கூறுகையில், 'ஆகாஷ் மீது ஏற்கனவே வீடுகளில் திருடியது தொடர்பாக இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறுவர் சீர்திருத்தபள்ளியில் இருந்துள்ளார்.', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ