உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோயில் கும்பாபிஷேக விழா

கோயில் கும்பாபிஷேக விழா

தேனி: கொடுவிலார்பட்டியில் தேவாங்கர் குலம், மன்மத மகரிஷி கோத்திரம் பாலிதார் வம்சம், சாலிமரக்கும்பு தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீலகுமம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஹம்பி ஹமேகூட காயத்ரி பீடம் மஹா சமஸ்தானதீஸ்வரர் தேவாங்கர் குல ஜகத்குரு பரமபூஜ்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ தயானந்தபுரி மஹா சந்நிதானம் தலைமையில் நடந்தது.கோயில் நிர்வாகத் தலைவர் முருகன், செயலாளர் சதானந்தன், பொருளாளர் ஆனந்தன், துணைத் தலைவர் வினோத் கண்ணன், நிர்வாகிகள் பழனிதாஸ், முருகன், சரவணன், மகாதேவன் முன்னிலை வகித்தனர். மஹாபிஷேகம், சர்வாலங்காரம், மஹாதீபாராதனை நடந்தது.விழாவில் தேவாங்கர் குல பிறந்த வீட்டுப் பிள்ளைகள், சம்பந்த காரர்கள், ஊர் பொது மக்கள், ஏ.பி.எம். கிராண்ட் அழகேசன் - மணிமொழி, விநாயகா பெயிண்ட்ஸ் பிரபாகரன், கிருஷ்ணா டெக்ஸ் கோவிந்தராஜன், மகாலட்சுமி ஏஜன்ஸீஸ் கணேசன் - கலா, ககன்தீப் பில்டர்ஸ் ஜெகன்தீப், கணபதி டிம்பர் டிப்போ தங்கராஜ், ஆனந்தகுமார், ராஜகணபதி பைனான்ஸ் ஆண்டவர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ