உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்கரை பாரதி நகரில் தெருநாய்களால் அச்சம் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வலியுறுத்தல்

தென்கரை பாரதி நகரில் தெருநாய்களால் அச்சம் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வலியுறுத்தல்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சி பாரதி நகரில் திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்து கட்டுக்குள் கொண்டுவர குடியிருப்போர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.நகரின் விரிவாக்க பாரதி நகர் உள்ளதால் இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒவ்வொரு தெருக்களிலும் 5 முதல் 10 தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. இவைகள் ஆங்காங்கே வீடுகளின் முன் கூடி உலா வந்து குடியிருப்புவாசிகளை அச்சுறுத்துகிறது. வெளியே வரும் சிறுவர், சிறுமிகளை திடீரென தெருநாய்கள் சுற்றி வளைப்பது , அக்கம் பக்கத்தினர் விரட்டி பாதுகாக்கின்றனர். திடீரென தெருநாய்களுக்குள் ஆக்கரோஷமாக குரைத்து சண்டையிடுவது பெரியவர்களையும் அச்சமடைய வைக்கிறது. இது ஒருவகையான அச்சுறுத்தல் என சுதாரித்து சென்றால் மறுபுறம் பசுமாடுகள் கூட்டம் தெருக்களுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகளை முட்டி விரட்டுகிறது. பெரியகுளம் நகர் பகுதியில் மாடு வளர்ப்போர் பாரதி நகரில் மேய்ச்சலுக்காக மாடுகளை அவிழ்த்து விட்டு செல்கின்றனர். காலையில் மேய்ச்சலுக்கு அவிழ்ந்து விடப்படும் மாடுகள் நாட்கள் கணக்கில் இங்கு முகாமிடுகிறது. மாடுகள் வீடுகளுக்கு முன் இடையூறாக படுத்து போக்குவரத்தில் சிரமம் ஏற்படுத்துகிறது. தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்து கட்டுப்படுத்த பேரூராட்சி மற்றும் கால்நடை துறை நடவடிக்கை எடுக்க குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டர் ஷஜீவனாவிடம் மனுக்கொடுத்து முறையிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை