உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ‛தொடர்ந்து கற்போம் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்பது அவசியம் தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., ஆலோசனை

‛தொடர்ந்து கற்போம் பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்பது அவசியம் தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., ஆலோசனை

தேனி: பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை 'தொடர்ந்து கற்போம்' பயிற்சியில் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி தேர்ச்சி பெற வைப்பது அவசியம்.' என, தேனி சி.இ.ஓ., இந்திராணி பேசினார்.தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு கூட்டம் சி.இ.ஓ., இந்திராணி தலைமையில் நடந்தது. தொடக்க கல்வித்துறை மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் மணிவண்ணன், பெருமாள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் 107 பேர் பங்கேற்றனர்.நிகழ்வில் சி.இ.ஓ., பேசியதாவது: 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு மறுதேர்வு ஜூலையில் நடக்க உள்ளது. இதற்காக 'தொடர்ந்து கற்போம்' பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதில் மாணவர்கள் பங்கேற்ப்பை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி, தேர்ச்சி பெற வைப்பது அவசியம். மேலும் பள்ளிகளில் சேதமடைந்த வகுப்பறைகள், கழிப்பறைகள், குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். நிதி கிடைத்தவுடன் சீரமைக்கப்படும். நிதி கிடைககாவிட்டால் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் கொடையாளர்களிடம் நிதி பெற்று பணிகளை மேற்கொள்வது அவசியம். இப்பணிகளை ஓராண்டுகுள் முடிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ