உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புறக்கணிப்பு போஸ்டர் அகற்றிய போலீசார்

புறக்கணிப்பு போஸ்டர் அகற்றிய போலீசார்

சின்னமனூர், : சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியதை போலீசார் கிழித்தெரிந்தனர்.சின்னமனூர் அருகே உள்ளது எரசக்கநாயக்கனூர் கிராமம். இங்கு வசிக்கும் யாதவர் சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், கிராமத்தில் பொது இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றாததை கண்டித்தும் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக போஸ்டர் ஒட்டினார்கள்.நேற்று முன்தினம் மாலை அக்கிராமத்தில் ஒட்டியவர்கள், சின்னமனூரில் ஓட்டிய போது போலீசார் அவற்றை அகற்றினர். அவர்கள் வைத்திருந்த போஸ்டர்களையும் பறித்து சென்றனர். தற்போது அந்த சமூகத்தினர் சமூக வளைதளங்களில் போஸ்டரை பதிவிட்டு, தங்களின் தேர்தல் புறக்கணிப்பை பரப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்