உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கனவு இல்ல திட்டத்திற்கு புதிய பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் கோரிக்கை

கனவு இல்ல திட்டத்திற்கு புதிய பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கம் கோரிக்கை

தேனி: தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள கருணாநிதி கனவு இல்ல திட்டத்திற்கு புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளர், இயக்குனருக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கடிதம் அனுப்பினர்.தமிழகத்தில் கருணாநிதி கனவு இல்ல திட்டத்தில் 2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 2024-2025 நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் ரூ.3.50 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது. பயனாளர்கள் தேர்வு விரைவில்நடக்க உள்ளது. இத்திட்டம் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பாரி, மாநில தலைவர் ரமேஷ் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை முதன்மை செயலாளர், இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.அதில், 'தற்போதைய நிலையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்களை நிறைவேற்ற போதிய பணியிடங்கள் இல்லாமல் பணிச்சுமையுடன் ஊழியர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் கனவு இல்ல திட்டத்திற்கு மாநில அளவில் இணை இயக்குனர், உதவி இயக்குனர், பி.டி.ஓ.,க்கள், கணினி உதவியாளர், மாவட்ட அளவில், வட்டார அளவில், பொறியியல் பிரிவுகளில் கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி தர வேண்டும். ' என கோரி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை