உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விளையாட்டு விடுதியில் சேர கால்பந்து வீரர்கள் தேர்வு தேனியில் மே 20ல் நடக்கிறது

விளையாட்டு விடுதியில் சேர கால்பந்து வீரர்கள் தேர்வு தேனியில் மே 20ல் நடக்கிறது

தேனி: விளையாட்டு விடுதிகளில் தங்கி மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு தேனியில் மே 20 முதல் 25 வரை நடக்கிறது.தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் மாவட்டம் வாரியாக விளையாட்டு விடுதிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டதிலும் குறிப்பிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்கி மாநில, தேசிய, சர்வதே போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். இதற்கான வீரர்கள் தேர்வு மாவட்ட வாரியாக நடக்கிறது. தேனி மாவட்ட விளையாட்டு அரங்களில் நேற்று முன் தினம் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால், ஹாக்கி பிரிவுகளில் வீரர்கள் தேர்வு நடந்தது. இதில் 138 வீரர்கள் பங்கேற்றனர். நேற்று வீராங்கனைகளுக்கு கூடைப்பந்து, தடகளம், கபடி, கால்பந்து, வாலிபால் பிரிவுகளில் தேர்வு நடந்தது. வீரர்களை தேர்வினை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஒருங்கிணைத்தார்.விளையாட்டு விடுதிகளுக்கான வீரர்கள் தேர்வில் மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மே 20 முதல் 25 வரை நடக்கிறது. இத் தேர்வில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வீரர்கள் பங்கேற்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை