உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து

வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து

ஆண்டிபட்டி: மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் நேற்று முன் தினம் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் மழை இன்றி மூல வைகை ஆறு வறண்டு மணல் பரப்பானது. ஆற்றில் அமைக்கப்பட்ட குடிநீர் உறை கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்தது. ஆற்றின் கரையோர விவசாயக் கிணறுகள், போர்வெல்களிலும் தண்ணீர் குறைந்ததால் இறவை பாசன விவசாயத்திற்கும் சிக்கல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக மலைப்பகுதியில் அவ்வப்போது பெய்து வந்த கோடை மழையால் ஆற்றில் நீர் வரத்து இல்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்கள் மணற்பாங்கான பகுதிகளை கடந்து வந்த நீர் நேற்று நண்பகல் கடமலைக்குண்டு கிராமத்தை கடந்தது. கடந்த பல மாதமாக ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் மணற்பங்காண பகுதியில் அதிகப்படியான நீர் உறிஞ்சப்பட்டு நீரின் வேகம் குறைகிறது. மலைப்பகுதியில் மழை தொடர்ந்தால் மட்டுமே மூல வைகை ஆற்றில் வரும் நீர், வைகை அணை வரை சென்று சேரும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ