உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

டூவீலரில் சென்றவர் கீழே விழுந்து பலி

தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி அருகே அம்சாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் 28. பெரியகுளம் அருகே வேல்நகரைச் சேர்ந்த சித்தப்பா வைரம் வீட்டிற்கு, அந்தப் பகுதியில் நடந்த திருவிழாவிற்கு வந்தார்.திருவிழா முடிந்து காமக்காபட்டிக்கு வைரம் மகன் முத்துவுடன் 27, டூவீலரில் சென்றார். டூவீலரை ஆனந்தகுமார் அதிவேகமாக ஓட்டினார். பெரியகுளம் வத்தலகுண்டு பைபாஸ் ரோடு, சில்வார்பட்டி பிரிவு அருகே நிலைதடுமாறி விழுந்தார்.இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமார் பலியானார்.காயத்துடன் முத்து தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல் மணிகண்டன் விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்