உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி போக்குவரத்து மாற்றம் ஆக.,4 வரை தொடரும்

தேனி போக்குவரத்து மாற்றம் ஆக.,4 வரை தொடரும்

தேனி : தேனி நகர் பகுதியில் அமலில் உள்ள போக்குவரத்து மாற்றம் ஆக., 4 வரை நீட்டிக்கப் படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சர்வீஸ் ரோடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்படும் மேம்பால பணி நடக்கும் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க ஜூலை 19 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வாகனங்கள் புது பஸ் ஸ்டாண்ட் முதல் அரண்மனைபுதுார் விலக்கு, பழைய பஸ் ஸ்டாண்டு வரை ஒரு வழியாகவும், மறு மார்க்கமாக, பழைய ஸ்டாண்ட், அல்லிநகரம், அன்னஞ்சி விலக்கு, புது பஸ் ஸ்டாண்ட் வர அறிவுறுத்தப்பட்டு இருந்தது. கனரக வாகனங்கள் வேறு பாதைகளில் செல்கின்றன. போக்குவரத்து மாற்றத்தால் நகரின் நெரிசல் ஏற்படுகிறது. பணிகள் நிறைவடையாதததால், போக்குவரத்து மாற்றம் ஆக., 4 வரை தொடரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ