உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி மே 2வது வாரத்தில் நடக்கிறது

ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி மே 2வது வாரத்தில் நடக்கிறது

தேனி, : ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி மே 2வது வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்.,19ல் தேர்தல்நடந்து முடிந்தது. தேனி தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்விகுழும கல்லுாரிகளில் வைக்கப்பட்டுள்ளது. ஷிப்ட் முறையில் அங்கு துணை ராணுவப்படை, போலீசார் என 250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 300 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது. தேர்தலின் போது மண்டல அலுவலர்கள், நுண்பார்வையாளராக பணியாற்றியவர்கள் ஓட்டு எண்ணிக்கையில் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி மே 2, 3 வது வாரத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை