உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி வேளாண் அலுவலர்களுக்கு கேரள பல்கலையில் பயிற்சி

தேனி வேளாண் அலுவலர்களுக்கு கேரள பல்கலையில் பயிற்சி

கம்பம், : தேனி மாவட்டத்தை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் 10 பேர்களுக்கு கேரள வேளாண் பல்கலை.,யில் 5 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.தமிழக வேளாண் துறையில் (அட்மா) வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை ஏஜன்சி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தை சேர்ந்த 10 வேளாண் அதிகாரிகளுக்கு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வேளாண் பல்கலை. யில் நவீன தொழில் நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. 5 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் வேளாண் தொழில்நுட்ப செயல்முறை விளக்கம், கற்றுணர்வது, நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விளக்கி பயிற்சியளிக்கப்படுகிறது.உதவி இயக்குநர்கள், வேளாண் துணை அலுவலர், வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் என அனைத்து மட்டங்களிலிருந்தும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை