உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உரிய ஆவணம் இல்லாத ஏலக்காய் மூடைகள்: ரூ.1.55 லட்சம் அபராதம்

உரிய ஆவணம் இல்லாத ஏலக்காய் மூடைகள்: ரூ.1.55 லட்சம் அபராதம்

போடி: போடி சுப்புராஜ் நகரில் தனியார் ஏலக்காய் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருபவர் மணிராஜ்.இவருக்கு சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் இருந்து 16 ஏலக்காய் மூடைகளை போடியில் உள்ள வேறு நிறுவனத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டன. கொண்டு செல்லும் வழியில் போடி கட்டபொம்மன் சிலை அருகே வணிக வரித்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் உரிய ஆவணம் இன்றி ஏலக்காய் மூடைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. துணை மாநில வணிக வரித்துறை அலுவலர்கள் கனகராஜ், பாக்கியராஜ் ஏலக்காய் மூடைகள், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். வாகனத்தை போடி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். உரிய ஆவணம் இல்லாததால் வணிக வரித்துறையினர் ரூ.ஒரு லட்சத்தி 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட பின் ஏலக்காய் மூடைகளை உரியவரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை