உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்: பாதுகாப்பிற்கு ஆயிரம் போலீசார் குவிப்பு

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்: பாதுகாப்பிற்கு ஆயிரம் போலீசார் குவிப்பு

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்ட போலீசார் வருகை தந்துள்ளனர்.தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல் திருக்கம்பம் நடுதல் செய்து துவங்கியது. திருக்கம்பத்திற்கு பக்தர்கள் முல்லைப்பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்து வந்தனர். கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம், ஆயிரம் கண்பானை, மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திகடன்களை செலுத்தி வந்தனர். கோயில் சித்திரை திருவிழா இன்று துவங்கிறது. இன்று அதிகாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மே 14 நள்ளிரவு 12:00 மணி வரை நடை திறந்திருக்கும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து கழகம் தேனி மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் 24 மணிநேர பஸ் சேவை வழங்க கலெக்டர் ஷஜீனா உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு பணிக்காக திண்டுக்கல், ராமநாதபுரம், துாத்துக்குடியில் இருந்து ஆயிரம் போலீசார் வந்துள்ளனர். ஆற்றங்கரை, கோயில் சுற்றுப்பகுதி, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருவிழாவிற்காக ஹிந்து அறநிலைத்துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீயணைப்புத்துறை வாகனங்கள், மருத்துவமுகாம், 4 இடங்களில் ஆம்புலன்ஸ் தயாராக வைக்கப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அக்னி சட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றும் தெப்பத்தில் இருந்து அக்னி சட்டி, பானைகள் அகற்றப்பட்டன. திருவிழாவையொட்டி முல்லைப்பெரியாற்றில் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கிற்காக ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை