உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்கள் பாழாகும் அவலம்

போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்கள் பாழாகும் அவலம்

தேனி: பழனிசெட்டிபட்டி இந்த ஸ்டேஷன் வளாகத்தில் விதிமுறை மீறல்களில் கைப்பற்றப்பட்ட டூவீலர், ஆட்டோ, கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை உரிமையாளர்கள் திரும்ப பெறாத நிலையில், அவற்றை ஆயுதப்படை வாகனப்பிரிவில் ஒப்படைத்து ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள வாகனங்கள் ஸ்டேஷனில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள் ஸ்டேஷனுக்கு வெளியே சிறுபாலத்தின் ஓரத்தில் நிறுத்தப்பட்டு, மழை வெயிலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. உரிமையாளர்கள் பெறாத வாகனங்களை ஏலம்விட்டும், விசாரணையில் உள்ள வாகனங்களை பாதுகாக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி டி.எஸ்.பி., ஸ்டேஷனில் நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்