உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழாய்களில் தண்ணீர் கசிவு

குழாய்களில் தண்ணீர் கசிவு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டம், ஆண்டிபட்டி - சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் விநியோகம் உள்ளது. கூடுதல் தேவைக்கு அந்தந்த பகுதியில் உள்ள பொதுக்கிணறுகள், போர்வெல் நீர் பயன்படுத்தப்படுகிறது. 10வது வார்டு சுப்பிரமணியர் கோயில் தெருவில் உள்ள பொதுக்கிணற்றிலிருந்து குழாய் மூலம் வார்டில் உள்ள பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன் தரையின் மேல் தளத்தில் இரும்பு குழாய்கள் பதித்து வார்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக் குழாய் அமைத்துள்ளனர். குழாய் இணைப்புகளில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. திருகுகள் தரமற்ற இருப்பதால் வீணாகிறது. தரமற்ற குழாய் பதிப்பு, இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டதால் பல இடங்களில் குழாய்களில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது என புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை