உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை

மாவட்டத்தில் பரவலாக பெய்த கோடை மழை

தேனி : மாவட்டத்தில் சில நாட்களாக கோடை மழை குளிர்வித்து வருகிறது. நேற்று மாலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மாலை, இரவு நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. தேனி நகர் பகுதியில் மாலை 6:00 மணிக்கு சாரல் மழை துவங்கியது. தொடர்ந்து 6:30 மணியளவில் கன மழையாக பெய்ய துவங்கியது. பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்தது. நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழை ஒரு மணிநேரம் நீடித்தது. பல இடங்களில் ரோட்டோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. நேற்று முன்தினம் அரண்மனைப்புதுாரில் அதிகபட்சமாக 16.4 மி.மீ., உத்தமபாளையம் 10.6 மி.மீ., சோத்துப்பாறை 7 மி.மீ., பெரியாறு அணை 5 மி.மீ., வைகை அணையில் 3.8 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் போடி, கம்பம், கூடலுார், உத்தமபாளையம், ஆண்டிபட்டி பகுதிகளிலும் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை