உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொட்டும் மழையில் காட்டு யானைகள் ரசிப்பு

கொட்டும் மழையில் காட்டு யானைகள் ரசிப்பு

மூணாறு : மாட்டுபட்டியில் புல்மேடுகளில் தீவனத்திற்கு சுற்றித்திருந்த காட்டு யானைகளை கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி முக்கிய சுற்றுலா பகுதியாகும். அங்கு அணையின் கரையோரம் உள்பட பல பகுதிகளில் மாடுகளின் தீவனத்திற்கு புல் வளர்க்கப்படுகிறது. அவை காட்டு யானைகளுக்கும் தீவனமாக பயன்படுகின்றது. அதனால் புல் மேடுகளில் பெரும்பாலான நாட்களில் காட்டு யானைகளை காண முடியும்.இந்நிலையில் நேற்று புல்மேடுகளில் மூன்று இடங்களில் ஐந்து காட்டு யானைகள் தீவனத்திற்கு முகாமிட்டு சுற்றித் திரிந்தன. அவற்றை சுற்றுலா பயணிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை