இறந்த மூதாட்டி நகையை திருடிய பெண் சிக்கினார்
ஆண்டிப்பட்டி:தேனி மாவட்டம் போடி எஸ்.எஸ்.புரத்தைச் சேர்ந்த கமலம், 82; உடல்நலம் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவு அறையில் பரிசோதித்த டாக்டர்கள் மூதாட்டி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி யின் உடலில் இருந்த 4 சவரன் செயின் மாயமானது. உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் புகாரின்படி, க.விலக்கு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருந்த உறவினரை பார்க்க வந்த தேனி வளையப்பட்டியைச் சேர்ந்த நந்தினி, 30, மூதாட்டியின் உடலில் இருந்து செயினை திருடியது தெரியவந்தது. போலீசார் நந்தினியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.