உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உலக சுற்றுச்சூழல் தின விழா

உலக சுற்றுச்சூழல் தின விழா

--பெரியகுளம், : பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வள மேலாண்மை துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் ராஜாங்கம் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாசகங்கள் நிறைந்த பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி வளாகத்தில் ஊர்வலம் சென்றனர். முதல்வர் பேசியதாவது: நமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இயற்கை வளங்கள் நமக்கு உறுதுணையாக உள்ளது. ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாத்து இயற்கை வளங்களை அதிகரிக்க செய்வது அவசியம் என்றார்.கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை