உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உலக தண்ணீர் தின விழா

உலக தண்ணீர் தின விழா

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் உலக தண்ணீர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை வகித்தார். ஆலோசகர் தமயந்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு தண்ணீரின் அவசியம், மாசுபடாமல் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள், சேமிப்பின் முறைகள் குறித்து பள்ளி நிர்வாகி மாத்யூஜோயல் விளக்கினார். தண்ணீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று செயல் விளக்கம் காட்டப்பட்டது. குடிநீர் மட்டுமின்றி தண்ணீர் எங்கெல்லாம் உள்ளதோ அவற்றை மாசுபடாமல் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்று எடுத்துக்கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை