உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி மாவட்டத்தில் உயர்கல்வி விபரம் அறிய 1164 மாணவர்கள் கல்லுாரிகளுக்கு பயணம்

தேனி மாவட்டத்தில் உயர்கல்வி விபரம் அறிய 1164 மாணவர்கள் கல்லுாரிகளுக்கு பயணம்

தேனி : மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 1164 மாணவர்கள் உயர்கல்விப் படிப்புகள், கல்லுாரி கட்டமைப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் 9 அரசு, உதவி பெறும் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் ஜன.,23, 29ல் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.முதற்கட்டமாக ஜன.,23ல் ஆண்டிப்பட்டி, மயிலாடும்பாறை, உத்தமபாளையம், போடி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 1163 மாணவர்கள் கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.இரண்டாவது கட்டமாக கம்பம், தேனி, பெரியகுளம், சின்னமனுார் வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 1164 பேர் 7 பஸ்களில் தேனி மருத்துவக் கல்லுாரி, அரசு சட்டக் கல்லுாரி, ஆண்டிப்பட்டி, வீரபாண்டி, கோட்டூர் அரசு கலை கல்லுாரிகள், போடி அரசு பொறியியல் கல்லுாரி ஆகிய 9 கல்லுாரிகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு பேராசிரியர்கள் மூலம் படப் பிரிவுகள், ஆய்வகங்கள், வேலை வாய்ப்புகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை