உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்டத்தில் கடந்தாண்டில் 1227 மெட்ரிக் டன் மீன்கள் உற்பத்தி மீன்வளத்துறை உதவி இயக்குநர் தகவல்

 மாவட்டத்தில் கடந்தாண்டில் 1227 மெட்ரிக் டன் மீன்கள் உற்பத்தி மீன்வளத்துறை உதவி இயக்குநர் தகவல்

தேனி: மாவட்டத்தில் கடந்தாண்டு மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், அணைகள் மூலம் சுமார் 1227 மெட்ரிக் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் சவுந்திரபாண்டியன் தெரிவித்தார். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் ஆறுகள், அணைகள், குளங்கள், கண்மாய், ஊரணி அதிகம் உள்ளன. நீர்வளம் மிக்க இம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்து மீன் வளர்ப்பு தொழில், வணிகத்தில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் மீன்வளம் குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது: மீன் வளத்துறை பற்றி.... மாவட்டத்தில் மீன் உற்பத்தியை பெருக்குதல். இதற்காக நவீன் தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்குதல், மீன் வளர்த்தல், வியாபாரம் செய்தல், தொழில் செய்ப வர்களுக்கு மீனவ நல வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்திட்டங்களில் பயன்பெறஉதவுதல். துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், அணைகளை ஏலம் விடுதல். மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகியவை துறையின் முக்கிய பணியாகும். மாவட்டத்தில் மீனவர்கள் எண்ணிக்கை எவ்வளவு மாவட்டத்தில் 960 மீனவ குடும்பங்களில் 6050 பேர் வசிக்கின்றனர். இவர்கள் மீன்பிடித்தல், வியாபாரம் செய்தல் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மீன் சார்ந்த தொழில்களில் 532 பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை உள்ளடக்கி 7 மீனவ கூட்டுறவு சங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. மீனவர் நல வாரியத்தில் சுமார் 1945 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் எத்தனை துறையின் கட்டுப்பாட்டில் 31 குளங்கள் உள்ளன. இதில் மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு 10 குளங்கள் ஏலம் விடப்பட்டு மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 8 கண்மாய்கள் மின்னணு ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2 கண் மாய்கள் நீதிமன்ற வழக்கில் உள்ளன. 5 குளங்கள் ஏலம் விடப்பட்டு யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. அதனால் ஏலத்தொகை திருத்தப்பட்டு மீண்டும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஆண்டிபட்டி சக்லியன்குளம், தேனி மீறு சமுத்திர கண்மாய், மந்தகுளம் உட்பட 5 கண்மாய்கள் ஏலம் விடபடாதவை என பட்டியலிடப்பட்டுள்ளன. அணைகளில் மீன்பிடி ஏலம் பற்றி வைகை அணை, மஞ்சளாறு, சண்முகாநதி அணைகள் மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவைகுறிப்பிட்ட காலத் திற்கு நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டுவருகி றது. வைகை அணை 2022 -20-23ல் ரூ.80 லட்சத்திற்குஏலம் விடப் பட்டது. ஆண்டுக்கு 10 சதவீதம்தொகையை உயர்த்தி வழங்க வேண் டும்.ஐந்துஆண்டுகள் ஒப்பந்தம்அமலில் இருக் கும். மஞ்சளாறு அணை ஏலம் எடுத்த நபர் இந் தாண்டிற்கானதொகை ரூ.44லட்சம்செலுத்த வில்லை.அதனால் அந்த ஏலம் ரத்துசெய்யப்பட்டுள் ளது. மறு ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. மீன்பிடி ஏல நடைமுறை பற்றி மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் இ டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. டெண்டர் விடுவதற்கு முன் மீன் கூட்டுறவு சங்கங்களிலம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. ஒரே சங்கத்தில் பலர் விரும்பினால் டெண்டர் முறை கோரப்படுகிறது. டெண்டரில் கூட்டுறவு சங்கத்தினர் மட்டுமின்றி தனி நபர்களும் ஏலத்தில் பங்கேற்கலாம். ஏலம் விடுத்த பின் அதில் 50 சதவீத தொகை பொதுப்பணித்துறைக்கு வழங்கப்படுகிறது. அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணைகள் பற்றி அரசு சார்பில் வைகை அணை,மஞ்சளாறு அணை அருகே மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணை செயல்படுகிறது. வைகை மீன் குஞ்சு பண்ணையில் கட்லா, ரோகு, மிர்கால், கெண்டை வகை மீன்குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அரசு திட்டங்களில் மானிய விலையில் விவசாயிகள், மீன் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. மஞ்சளாறு அணையில் கெண்டை மீன் குஞ்சு வளர்ப்பு, மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரு மீன்குஞ்சு பண்ணைகளில் கடந்தாண்டு சுமார் 40 லட்சம் மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப் பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சுகள் உற்பத்தி பற்றி மஞ்சளாறு அணை மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மரபணு மேம்படுத்தப்பட்டதிலேப்பியா என்பது ஆண் கெண்டை மீன்களை உற்பத்தி செய்வதாகும். காரணம் நீர்நிலைகளில் அதிக அளவிலான பெண் திலேப்பியா ( ஒரு வகை கெண்டைமீன்) வளரும் போது அதிக மீன்குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்யும். அப்போது குறிப்பிட்ட இடத்தில் அதிக அளவிலான மீன்கள் வரும். இதனால் மீன்களுக்கு சத்து பற்றாக்குறையுடன் வளரும் சூழல் ஏற்படும். இதனால் மரபணு மேம்படுத்தப்பட்டு ஆண் மீன்கள் மட்டும் இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மீன்குஞ்சுகள், பண்ணை அமைத்து மீன் வளர்ப்பவர்களுக்கு மட்டும் வழங்குகிறோம். கண்மாய், குளங்களில் ஏலம் எடுத்து மீன் வளர்ப்பவர்களுக்கு மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சுகள் வழங்குவதில்லை. மீன் குஞ்சுகள் வாங்குபவர்கள் தங்கள் பகுதி மீன் வளத்துறை அதிகாரிகளிடம் உரிய கடிதம் வாங்கி வர வேண்டும். கேரளாவில் இருந்து அதிகம் மீன் குஞ்சுகள் வாங்கி செல்கின்றனர். மாவட்டத்தில் கடந்தாண்டு மீன் உற்பத்தி மாவட்டத்தில் மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், விவசாய பண்ணை குட்டைகள், தனியார் மீன் பண்ணைகள் என மொத்தம் 1227 மெட்ரிக் டன் மீன் உற்பத்தி ( ஒரு டன் ஆயிரம் கிலோ) செய்யப்பட்டள்ளது. இதில் வைகை அணையில் மட்டும் சுமார் 295 டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணையில் 59 டன், சண்முகாநதி நீர்தேக்கத்தில் 1.1 டன் மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை பெருக்க சிறப்பு திட்டங்கள் உள்ளதா... மீன் உற்பத்தியை பெருக்கு மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மீன் வளர்க்க ஏதுவான இடங்களை கண்டறிந்து மீன் வளர்த்தலை ஊக்குவிக்கிறோம். இத்திட்டத்திற்காக பொதுப்பணித்துறையிடமிருந்து 9 கண்மாய்கள் பெற்றுள்ளோம். இது தவிர தனியார் மீன் பண்ணை குட்டைகள் அமைத்து வருகிறோம். இத்திட்டத்தில் 94 மீன் வளர்ப்போர், 25 பண்ணை குட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆப்ரிக்க கெளுத்தி மீன் விற்பனை, உற்பத்தி உள்ளதா... தனியார் மீன் பண்ணைகளில் ஆய்வுகள் செய்கிறோம். இங்கு ஆப்ரிக்க கெளுத்தி மீன் உற்பத்தி இல்லை. உணவுப் பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து மீன் விற்பனை நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொள்கிறோம். தடை செய்யப்பட்ட வகை மீன் விற்பனை இல்லை. மீனவர் நலத்திட்டங்கள் பற்றி மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்தல், மீன்குஞ்சு வளர்ப்புக்குளம் அமைத்தல், அலங்கார மீன் பண்ணை அமைத்தல், மீன் விற்பனை நிலையம் அமைத்தல், குளிர்சாதன வசதியுடன் கூடிய நான்கு சக்கர வாகனம், குளிர்சாதன பெட்டியுடன் கூடிய டூவீலவர் வழங்குதல், ஐஸ்கட்டி விற்பனை நிலையம் அமைத்தல், 50 சதவீத மானியத்தில் மீன்பிடி உபகரணங்களான வலை, பரிசல் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு 23 பேருக்கு ரூ. 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மீன் உப பொருட்களான மீன் உறுகாய், பதப்படுத்துதல், மசாலா தயாரித்தல், சூப், கட்லட் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் பயன்பெற என்ன செய்ய வேண்டும் மீனவ நலத்துறை தொடர்பான திட்டங்களில் பயன்பெற, மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்தல் உள்ளிட்டவைக்கு வைகை அணை பூங்கா ரோட்டில் உள்ள மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை