உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 180 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 180 கிலோ குட்கா பறிமுதல்

கம்பம்: கம்பத்தில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் போலீசார் சோதனையில் பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 180 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.கம்பத்தில் குட்கா விற்பனையை தடுப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நவ. 28 ல் வடக்கு எஸ்.ஐ. நாகராஜன் தலைமையில் கே.கே. பட்டி ரோட்டில் ரோந்து சென்ற போது ஏழரசு களம் அருகில் நின்றிருந்த கம்பத்தை சேர்ந்த முகமது சேட் 40, குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் 50 ஆகியோரிடம் இருந்த 13 கிலோ குட்காவுடன் கைது செய்தனர். ஈஸ்வரனின் சகோதரர் குணசேகரனிடமிருந்து 107 கிலோ குட்கா பறிமுதல் செய்து கைது செய்தனர்.இந்த விசாரணையில் ஈஸ்வரன் மற்றும் முகமது சேட் அலைபேசி தொடர்புகளை ஆய்வு செய்தனர். அதில் கம்பத்தில் உள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனத்திற்கு பெங்களூவில் இருந்து ஈஸ்வரன் , முகமது சேட்க்கு 180 கிலோ குட்கா பார்சல் வந்திருந்தது கண்டுபிடத்து எஸ். ஐ., நாகராஜன் அதனை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை