உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேசிய வருவாய் வழித்தேர்வில் 2950 மாணவர்கள் பங்கேற்பு

தேசிய வருவாய் வழித்தேர்வில் 2950 மாணவர்கள் பங்கேற்பு

தேனி : தேனியில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேசிய வருவாய்வழித்தேர்வில் 2950 மாணவர்கள் தேர்வு எழுதினர்.தேசிய வருவாய் வழி, படிப்பு உதவித்தொகைத் தேர்வு அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்தேர்விற்கு 2023 டிச.,ல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. தேனியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 8 ம் வகுப்பு படிக்கும் 3ஆயிரத்து 7 மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்தனர். தேர்வு தேனி நாடார்சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 15 மையங்களில் நடந்தது. தேர்வில் 2950 மாணவர்கள் பங்கேற்றனர். 57 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையங்களை சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., வசந்தா பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ