உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் பொங்கல் நாட்களில் மது விற்ற 42 பேர் கைது

தேனியில் பொங்கல் நாட்களில் மது விற்ற 42 பேர் கைது

தேனி : பொங்கல் பண்டிகை நாட்களில் சட்ட விரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 42 பேரை கைது செய்து 926 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.பண்டிகை நாட்களில் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடமலைக்குண்டு எஸ்.ஐ., ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது கரட்டுப்பட்டு பகுதியில் கருப்பசாமி கோயில் தெரு பாண்டியன் 38, 197 மதுபாட்டில்களை சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ25,210 ஆகும். மேலும் ஜம்புலிப்புத்துார் மேற்குத்தெரு செந்தில்நாதன் 44, நாகேந்திரன் 31 ஆகியோர் டூவீலரில் மதுகடத்தினர். ஆண்டிபட்டி போலீசார் இருவரையும் கைது செய்து, 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் 5 சப்டிவிஷன்கள் உட்பட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரும் நடத்திய ரோந்துப் பணியில் மது பதுக்கிய, கடத்திய 42 பேரை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த 926 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை