மேலும் செய்திகள்
ரேஷன் அரிசி பறிமுதல்
20-Oct-2024
கம்பம்: கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இதை தடுக்க அரசு ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாரை களம் இறக்கியுள்ளது. இப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கம்பம் பாரதியார் நகர் முதலாவது தெருவில் குடியிருக்கும் ஜாகிர் உசேன் மகன் சாதிக்அலி 27,யின் வீட்டை சோதனையிட்டனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடையிலான 100 மூடைகளில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து சாதிக் அலியை கைது செய்தனர். கைப்பற்றிய ரேஷன் அரிசி உத்தமபாளையம் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைக்கப்பட்டது. உணவு கடத்தல் தடுப்பு- போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Oct-2024