உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பூர்த்தி செய்த 50 சதவீத எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் திரும்ப பெறப்பட்டது அரசியல் கட்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல்

 பூர்த்தி செய்த 50 சதவீத எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் திரும்ப பெறப்பட்டது அரசியல் கட்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல்

தேனி: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (எஸ்.ஐ. ஆர்.,)க்கு வழங்கப்பட்ட படிவங்களில் 50 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார். கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்பட்டியில் சிறப்பு திருத்த பணி தொடர்பாக அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., செய்யது முகமது, கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பேசுகையில், 'வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து பி.எல்.ஓ.,க்களிடம் வழங்கி விட்டால் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் ஆகாது. படிவம் வழங்காவிட்டால் நீக்கம் செய்யப்படும். பிறகு மீண்டும் புதிதாக படிவம் வழங்கி இணைக்க வேண்டும். தற்போது உள்ள தகவல்களை பூர்த்தி செய்து படிவத்தை வழங்க வேண்டும்.படிவங்கள் திரும்ப பெறும் பணி டிச., 4க்குள் முடிக்க வேண்டும். இ தனால் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள் உதவி செய்ய வேண்டும். பி.எல்.ஓ.,க்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 50 சதவீத படிவங்கள் பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டுள்ளது,' என்றார். விபரம் பூர்த்தி செய்வதில் சிரமம் சிவாஜி, ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர்: 2002 வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்ய சிரமம் உள்ளது. அரசியல் கட்சியினருக்கு 2002 வாக்காளர் பட்டியல் வழங்க வேண்டும். கிராமங்களில் சிலருக்கு இன்னும் படிவங்கள் வழங்க வில்லை. வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூ.,: பி.எல்.ஓ.,க்கள் படிவங்களை திரும்ப பெறுவதில் அலட்சியமாக உள்ளனர். பெரியகுளம் சப்கலெக்டர்: வாக்காளர்களிடம் பூர்த்தி செய்த படிவங்களை கட்சி பி.எல்.ஓ., 2, தன்னார்வலர்கள் வழங்கலாம். நிஷாந்த, தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு: சில இடங்களில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் உள்ளதை கண்டறிவது சிரமமாக உள்ளது. அதனால் 2002, 2025 வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்பட்டியலை அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டும். சிலர் பெற்றோர் விபரம் தெரியாததால் பூர்த்தி செய்யாமல் வழங்குகின்றனர்.நீக்கப்பட்ட விபரம் வெளியிடப்படும் கலெக்டர்: பெற்றோர் விபரங்கள் பூர்த்தி செய்யாமல் வழங்கினாலும், படிவங்களை வாங்கி கொள்ளுங்கள். டிச., 9க்கு பின் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அப்போது குறிப்பிட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வழங்கி அவர்கள் பெயரை உறுதி செய்து கொள்ளலாம். பெயர் பட்டியலில் வரவில்லை என்றால் டிச.,9 முதல் 2026 ஜன.8 க்குள் படிவம் 6 வழங்கி பெயர் சேர்த்து கொள்ளலாம். வரைவு வாக்காளர்பட்டியில் டிச.,9ல் வெளியிடப்படும். அதில் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டால், எதற்காக நீக்கம் செய்யப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படும் என்றார். செல்லத்துரை, தெற்கு மாவட்ட செயலாளர், தே.மு.தி.க.,: படிவம் பூர்த்தி செய்து வழங்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வரும் நாட்களில் தொடர் அறிவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்., நகர தலைவர் கோபிநாத், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பாண்டியராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்