உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் 75 சதவீதம் வழங்கல்

 பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் 75 சதவீதம் வழங்கல்

தேனி: மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிக்காக வாக்காளர்களிடம் வழங்கப்பட்ட படிவங்கள் 75 சதவீதம் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத் பணி நவ.4ல் துவங்கியது. டிச.4ல் முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் டிச.11 வரை பணி நடைபெறும் என்றும், டிச.16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பி.எல்.ஓ.,க்கள் மூலம் எஸ்.ஐ.ஆர்., பணிக்கான படிவங்கள் வழங்கப்பட்டன. அதனை முறையாக பூர்த்தி செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டன. மாவட்டத்தில் இதுவரை தொகுதி வாரியாக ஆண்டிபட்டி 76.5 சதவீதம், பெரியகுளம்(தனி) 77 சதவீதம், போடி 78 சதவீதம், கம்பம் 70 சதவீத மனுக்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டுள்ளன. இதனை பி.எல்.ஓ.,க்கள், தன்னார்வலர்கள் மூலம் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. படிவங்கள் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் பி.எல்.ஓ.,க்களை அல்லது 04546 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி