உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒரு எலுமிச்சை ரூ.10க்கு விற்பனை

ஒரு எலுமிச்சை ரூ.10க்கு விற்பனை

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் மார்க்கெட்டில் ரூ.2க்கு விற்ற ஒரு எலுமிச்சை பழம் தேவை அதிகரிப்பால் ரூ.10 ஆக உயர்ந்தது.பெரியகுளம் அருகே சோத்துப்பாறை மலைப்பகுதியான அகமலை, ஊரடி, ஊத்துக்காடு, சின்னமூங்கில், கண்ணக்கரை வரை 30 க்கும் மலை கிராமப்பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் எலுமிச்சை பழம் சாகுபடியாகிறது. இங்கு விளையும் எலுமிச்சை பெரியகுளம் கமிஷன் கடைகள் மூலமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் எலுமிச்சையை ஜூஸ், சர்பத்துடன் கலந்து குடிக்கும் போது, தாகம் தணித்து உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்கிறது. ஜனவரி, பிப்ரவரியில் 32 கிலோ எடையுள்ள எலுமிச்சை மூடை ரூ.ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இதனால் ஒரு எலுமிச்சை ரூ.2 முதல் ரூ.3 வரை விற்பனையானது. வெயில் தாக்கத்தால் தேவை அதிகரித்து தற்போது 32 கிலோ மூடை ரூ.2500 முதல் ரூ.2700 வரை விற்கப்படுகிறது. வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இதனால் ஒரு எலுமிச்சை பழம் நேற்று ரூ.10 க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை