உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருட்டில் பிடிபட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

திருட்டில் பிடிபட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

மூணாறு : மூணாறு அருகே வட்டவடையில் ஊர் காடு பகுதியில் சர்ச்க்குச் சொந்தமான ஆசிரமத்தில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தபோது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வட்டவடை கிராமத்தைச் சேர்ந்த நாயகராஜ் 32, 70க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். இறுதியாக கடந்த அக்.6ல் அதிகாலை 4:00 மணிக்கு மூணாறில் கேரள அரசு பஸ் டிப்போவில் அத்துமீறி நுழைந்து நடத்துனர்களின் அலைபேசிகள், ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றார். அவரை அக்.8ல் போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் ஜாமினில் வெளி வந்தவர் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வட்ட வடை ஊர்காடு பகுதியில் உள்ள சர்ச்க்குச் சொந்தமான ஆசிரமத்தில் அத்துமீறி நுழைந்து இன்வெர்ட்டர், பேட்டரி உள்பட பல்வேறு பொருட்களை திருட முயன்றார். அதனை பார்த்த பொதுமக்கள் நாயகராஜை பிடித்து வைத்து தேவிகுளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.வட்டவடைக்கு சென்ற போலீசாரிடம் நாயகராஜை பொதுமக்கள் ஒப்படைத்தபோது அவர் திடிரென மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை மூணாறில் டாடா மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் மேல்சிகிச்சைக்கு கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கழுத்தில் அறுவை சிகிச்சை முடிந்து போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை