உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வனத்துறையினரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது

வனத்துறையினரை தாக்கிய வழக்கில் ஒருவர் கைது

மூணாற : மூணாறு அருகே மாங்குளத்தில் வனத்துறையினரை தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த சருண்தங்கப்பனை 32, போலீசார் கைது செய்தனர்.மாங்குளம் ஊராட்சியில் உள்ள பெரும்பன்குத்து நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் ரசிக்கும் வகையிலும் தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2021ல் பார்வையாளர் கூடம் அமைக்கப்பட்டது. அதனை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டிச.4ல் பார்வையிட வந்த குட்டம்புழா வனத்துறை அதிகாரிகள் பார்வையாளர் கூடம் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.அதனால் வனத்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. மூணாறு போலீசில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதன்படி வனத்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக சருண்தங்கப்பனை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை